ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார்… அமெரிக்கா தகவல்!
Hamas : இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதியான மர்வான் இசா கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்தாண்டு முதல் இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையேயான போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் இருதரப்பிலும் பாதிப்பு இருந்தாலும், காசா பெரிய பாதிப்பை கண்டுள்ளது.
Read More – திடீர் திருப்பம்! ஒப்பந்தம் கையெழுத்து… பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்த பாஜக!
அதுவும் சமீப காலமாக ஹமாஸ் படையினரை குறித்து வைத்து காசாவில் இஸ்ரேல் தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அவ்வப்போது ஹமாஸ் அமைப்பும் பதிலடியும் கொடுத்து வருகிறது. இந்த தொடர் தாக்குதலில் காசாவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், பலர் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகிறது.
Read More – இந்த இடத்தில் தாக்குதல் நடத்த வேண்டாம்… இஸ்ரேலை எச்சரிக்கும் அமெரிக்கா.!
இதில் குறிப்பாக, ஹமாஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய பயங்கரவாதிகளை இஸ்ரேல் ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி கொன்றும் வருகிறது. அந்தவகையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதியான மர்வான் இசா கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) ஜேக் சல்லிவன், கடந்த வாரம் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (ஐடிஎஃப்) நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் மர்வான் இசா கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
Read More – மக்களவை தேர்தல்: விசிக சார்பில் மீண்டும் திருமாவளவன், ரவிக்குமார் போட்டி!
அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இஸ்ரேலால் மர்வான் இசா கொல்லப்பட்டதை ஹமாஸ் அமைப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, ஹமாஸின் ஆயுதப் பிரிவான எஸெடின் அல் கஸ்ஸாம் படைப்பிரிவின் துணை தலைவராக இசா இருந்ததாக கூறியுள்ளார்.