“நிச்சயமற்ற பொருளாதாரம்”: 18,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான்

Default Image

அமேசான் நிறுவனம் மேலும் 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தலைமை நிர்வாகி ஆண்டி ஜாஸ்ஸி புதன்கிழமை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பரில் 10000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் “நிச்சயமற்ற பொருளாதாரம்” மற்றும் கொரோனா தொற்றின் போது விரைவாக பணியமர்த்தப்பட்டது” என்பதை சுட்டிக்காட்டி 18,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக அமேசான் தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு ஜனவரி 18 முதல் ஊழியர்களுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி சிஇஓ ஜாஸ்ஸி தெரிவிக்கையில்  “இந்த பங்கு நீக்குதல் மக்களுக்கு கடினம் என்பதை ஆழமாக அறிந்திருப்பதாகவும், இந்த முடிவுகளை நாங்கள் இலகுவாக எடுத்துக்கொள்வதில்லை, “இதனால் பாதிக்கப்பட்டவர்களை ஆதரிப்பதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் பிரிப்புக் கட்டணம், இடைநிலை மருத்துவக் காப்பீட்டுப் பலன்கள் மற்றும் வெளி வேலை வாய்ப்பு ஆதரவு ஆகியவை அடங்கிய பேக்கேஜ்களை வழங்குகிறோம்,” என்று அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்