இனி சலூன் தொழிலிலும் களமிறங்கும் அமேசான் நிறுவனம்…!

ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் தற்போது சலூன் தொழிலிலும் தனது கால்தடத்தைப் பதிக்கவுள்ளது.
ஆன்லைன் விற்பனை தொழிலில் முன்னிலையில் உள்ள அமேசான் நிறுவனமானது தற்போது லண்டனின்,பிரஷ்ஃபீல்ட் என்ற பகுதியில் தனது முதல் சலூன் கடையை நிறுவ திட்டமிட்டுள்ளது.இந்த சலூன் கடை 1,500 சதுர அடி பரப்பளவில் இரண்டு மாடிக் கொண்டு மிகப் பிரம்மாண்டமாக அமையவுள்ளது.
வாடிக்கையாளர்கள் விரும்பும் ஸ்டைலில் முடி வெட்டிக் கொள்வதற்கு வசதியாக ‘அகுமேட்டட் ரியாலிட்டி’ போன்ற நவீன முடிவெட்டும் மெஷின்கள் அமேசான் சலூன் கடையில் பயன்படுத்தப்பட உள்ளன.
இதன்மூலம்,முடி வெட்டிக்கொள்ள வருபவர்கள் எந்தவகையான ஹேர் ஸ்டைலை விரும்புகின்றனர் என்பதை முன்கூட்டியே துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும்.மேலும்,அழகுசாதனப் பொருள்கள் குறித்த முழு விவரங்கள் ஒரு ஸ்மார்ட் டிஸ்ப்ளேவில் காண்பிக்கப்படும்,அதில் தங்களுக்கு தேவையான பொருள்களை, வாடிக்கையாளர்கள் QR கோடை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் முதல்கட்டமாக,அமேசானில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் இந்த சலூன் செயல்படும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025