வியக்கவைக்கும் அமேசானின் ரோபோடாக்சி..! முதல் முறையாக சாலையில் பயணம்..!
அமேசானின் ஜூக்ஸ் புதிய வகை ரோபோ டாக்ஸியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப நிறுவனமான அமேசானுக்கு சொந்தமான ஜூக்ஸ் நிறுவனம் தனது முதல் செல்ப் டிரைவிங் வாகன பிரிவில், புதிய வகை ரோபோ டாக்ஸியை அறிமுகப்படுத்தியுள்ளது. ரோபோ டாக்ஸியில் அலுவலக ஊழியர்களை பயணிகளாக பொதுப்பாதையில் பயணம் செய்ய வைத்து சோதனை செய்யப்பட்டது.
கலிபோர்னியாவின் போஸ்டர் சிட்டியில் உள்ள அதன் தலைமையகத்தில் ஒரு மைல் இடைவெளியில் உள்ள இரண்டு ஜூக்ஸ் நிறுவன கட்டிடங்களுக்கு இடையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. வாகனத்தை திறந்த பொது சாலையில் மக்கள் முன்னிலையில் கொண்டு செல்வது மற்றும் ஒழுங்குமுறை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு எங்கள் அணுகுமுறையை சரிபார்ப்பதற்கு இதுஒரு பெரிய படியாகும் என்று வணிக தலைமை நிர்வாகி ஐச்சா எவன்ஸ் கூறினார்.
இந்த ரோபோ டாக்ஸியில் ஸ்டீயரிங் அல்லது பெடல்கள் போன்ற ஓட்டுனருக்கு தேவையான ஏதும்இல்லாமல் தானாக செயல்படுகிறது. இந்த வசந்த காலத்தில் தனது ஊழியர்களுக்காக, இரண்டு இடங்களுக்கு இடையில் அடிக்கடி பயணிக்கும் ஷட்டில் சேவையாக ரோபோடாக்சிஸை இயக்கத் தொடங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.