புதினின் படைபலம் குறைந்தாலும் நோக்கம் மாறவில்லை.. அமெரிக்க பாதுகாப்பு துணைச் செயலாளர்..!
ரஷ்ய படைகள் போரினால் பாதிக்கப்பட்டு வந்தாலும் உக்ரைனை கைப்பற்றும் புதினின் நோக்கமானது மாறவில்லை என்று ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கான அமெரிக்க துணை பாதுகாப்பு செயலாளர் லாரா கூப்பர் கூறினார்.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடந்து வரும் போரினால் இரண்டு தரப்பிலும் பெருமளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த போரினால் பொருள் சேதம் தவிர பல உயிர்களும் பலியாகின்றன. இது தவிர போரில் பலியாகும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையும் அதிகம்.
போரினால் ரஷ்ய படை வீரர்களின் எண்ணிக்கை மற்றும் ஆய்தங்களின் அளவும் குறைந்த போதிலும் உக்ரைனில் ஆதிக்கம் செலுத்தும் மற்றும் உக்ரைனின் பகுதிகளைத் தொடர்ந்து கைப்பற்றும் நோக்கத்தை விளாடிமிர் புதின் கைவிடவில்லை என்று ரஷ்யா மற்றும் உக்ரைனை மையமாகக் கொண்ட பாதுகாப்பு துணைச் செயலர் லாரா கூப்பர் கூறியுள்ளார். உக்ரைன் ரஷ்ய போரில் சுமார் 1 லட்சம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் உள்ளன.