அமெரிக்கா அரசிடம் வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் பறக்கும் தட்டுகள் இருப்பதாகக் முன்னாள் உளவுத்துறை அதிகாரி தகவல்.
காங்கிரஸின் கமிட்டி கூட்டத்தில் பேசிய அமெரிக்க முன்னாள் உளவுத்துறை அதிகாரி டேவிட் க்ரூஷ், வேற்றுக்கிரக அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள் மற்றும் மனித உயிர் அல்லாத வேற்றுக்கிரகத்தைச்சேர்ந்த உடல்கள் மீட்கப்பட்டு அமெரிக்க அரசு மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தான் இதனை வெளியே சொன்னதற்கு தன் மீது தாக்குதல் நடந்ததாகவும் கூறினார்.
தன்னுடன் அமெரிக்க அரசாங்கத்தில் பணிபுரிந்தவர்களில் சிலர், இந்த வேற்றுகிரக நடவடிக்கைகளால் உடல்ரீதியாக காயமடைந்ததாகவும் மேலும் கூறினார். ஆனால் தான் இதுவரை எந்த ஏலியன்களையும் பார்த்ததில்லை என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அமெரிக்காவின் பென்டகன் நிர்வாகம் இவரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இவரைத்தவிர முன்னாள் கடற்படைத் தளபதி 2004 ஆம் ஆண்டு பயிற்சிப் பணியின் போது விசித்திரமான பொருளை பார்த்ததாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ஓய்வுபெற்ற கடற்படை விமானி ரியான் கிரேவ்ஸ், அட்லாண்டிக் கடற்கரையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து, வேற்றுக்கிரக நடவடிக்கைகளை கண்டதாகவும், கூறியுள்ளது இந்த விவகாரத்தில் தற்போது அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…