விமான ஊழியர்கள் திடீர் போராட்டம்..! பயணிகள் தவிப்பு..!
ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனியின் விமானம் ஆன லுஃப்தான்சா ஏர்லைன்ஸில் பணிபுரியும் தரை நிலை ஊழியர் (Ground Staff ) ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.
பாகிஸ்தான் : இரட்டை குண்டுவெடிப்பு.! பலி எணிக்கை 30 ஆக உயர்வு..!
இதனால் லுஃப்தான்சா ஏர்லைன்ஸில் பயணிக்கும் பயணிகள் எல்லாரும் தாங்கள் செல்ல இருந்த இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். லுஃப்தான்சா ஊழியர்கள் ஒருநாள் போராட்டமாக இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் ஊதிய விவகாரம் தொடர்பாக நடைபெறும் இந்த போராட்டத்தில் 25000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தொழிற்சங்களின் அறிக்கையின்படி, இந்த ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டமானது 27 மணி நேரம் நடைபெறும் எனவும் இன்று வியாழக்கிழமை காலை 4 மணிக்குத் தொடங்கி காலை 7:10 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் விமான சேவைகள் 90% ரத்து செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு நாட்டிலிருந்து வரும் விமானங்கள் எல்லாம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் மூலமாக சென்னையிலிருந்து அமெரிக்கா, கனடா, ஜெர்மனி செல்ல கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் என்ன செய்வதென்று அறியாமல் தவிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.