காசா மக்களுக்கு விமானம் மூலம் நிவாரண உதவி.. அமெரிக்கா அறிவிப்பு..!
Joe Biden: அமெரிக்கா விரைவில் விமானம் மூலம் காசாவிற்கு நிவாரண உதவிகளை வழங்கத் தொடங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார். ஜோ பைடனின் இந்த அறிவிப்பு நேற்று முன்தினம் உதவி பொருள்கள் வாங்கி கொண்டு இருந்த பாலஸ்தீனிய பொதுமக்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்திய பிறகு வந்துள்ளது.
READ MORE- மும்பை தாக்குதல்… முக்கிய குற்றவாளி அசாம் சீமா பாகிஸ்தானில் உயிரிழப்பு.!
காசா பகுதியில் நிவாரணப் பொருட்களை வாங்கி கொண்டு இருந்த போது இஸ்ரேலிய இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காசாவில் நடந்த இந்த தாக்குதலுக்கு பல நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தியாவும் இதற்கு பதிலளித்துள்ளது. “வடக்கு காசாவில் உதவிகள் வழங்கும் போது தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என கூறியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேலை தாக்கியது. இந்த தாக்குதல்களில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 250-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடிபட்டனர். இதையடுத்து, ஹமாஸ் பகுதியான காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
READ MORE- காசாவில் உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்..104 பேர் உயிரிழப்பு..!
முதலில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு, பின்னர் தரைவழித் தாக்குதல் தொடங்கப்பட்டது. இந்த தாக்குதல்களில் தற்போது வரை காஸாவில் சுமார் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.