அமெரிக்காவில் இருந்து வெளிநாடு செல்லும், வெளிநாட்டில் இருந்து அமெரிக்கா வரும் 760 விமானங்கள் தாமதம்.
தொழிநுட்ப கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடங்கியுள்ளது. அமெரிக்காவில் விமான போக்குவரத்துத்துறை தலைமையகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விமான சேவை பாதிப்பு என தகவல் கூறப்படுகிறது. விமான சேவை முடங்கியதால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் அனைத்து விமானங்களும் அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் இருந்து வெளிநாடு செல்லும், வெளிநாட்டில் இருந்து அமெரிக்கா வரும் 760 விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. விமான நிலைய நிலவரம் குறித்து விமானிகளுக்கும், ஊழியர்களுக்கும் தகவல் அனுப்பும் அமைப்பில் கோளாறு என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
நடுவானில் பறந்த கொண்டிருக்கும் பல விமானங்களின் நிலை தெரியாததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறை முழுவீச்சில் சரி செய்து வருவதாக அதிகாரிகள் தகவல் கூறப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறு எப்போது சரிசெய்யப்படும் என்பது தெரியாததால் குழப்பம் நிலவி வருகிறது.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…