ரிசர்வ் வங்கி – நேபாள ராஸ்ட்ரா வங்கி இடையே UPI-NPI இணைப்புக்கு ஒப்பந்தம்

இந்தியா மற்றும் நேபாளத்தின் மத்திய வங்கிகள், இரு நாடுகளின் விரைவான கட்டண முறைகளை ஒருங்கிணைப்பதற்கான முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் நேபாள ராஸ்ட்ரா வங்கி (NRB) இணைந்து, UPI-NPI இணைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த ஒருங்கிணைப்பானது இந்தியா மற்றும் நேபாளம் இடையே எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரு நாடுகளின் மத்திய வங்கிகளுக்கு இடையேயான இணைப்புக்கான ஒப்பந்தம் தொடர்பான முழுமையான விதிமுறைகள் தொடர்பில் கையெழுத்தான பிறகு, UPI மற்றும் NPI-ன் இணைப்புக்கு தேவையான அமைப்புகள் அமைக்கப்படும்.

இம்ரான் கான் கட்சியின் உமர் அயூப் பிரதமர் வேட்பாளராக நியமனம்… வெளியான தகவல்!

இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நேபாள ராஸ்ட்ரா வங்கி இடையேயான UPI-NPI இணைப்பு மூலம் விரைவான கட்டண முறைகளை ஒருங்கிணைப்பது எளிதாக்கப்படும். மேலும், இரு நாடுகளுக்கு இடையே நீடித்திருக்கும் வரலாற்று, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளையும் இது மேலும் வலுப்படுத்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்