மீண்டும் தொடங்கிய போர்… காசாவில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் ராணுவம்.!
இஸ்ரேல் ஹமாஸ் போர் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி கிட்டத்தட்ட 50 நாட்களை கடந்து நடைபெற்று வந்தது. இந்த போரில் முதலில் ஹாமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் சுமார் 1400 பேர் உயிரிழந்தனர் என கூறப்பட்டது. அதே போல பதிலுக்கு இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரில் நடத்திய தாக்குதல் 14 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகின.
இரு தரப்பு போர் காரணமாக பொதுமக்கள், குறிப்பாக காசா நகரத்து பாலஸ்தீன மக்கள் , பெண்கள், குழந்தைகள் அதிகள் பாதிக்கப்படுகின்றனர். அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன ந கூறி போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் வலியுறுத்தியது. இறுதியில் அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாட்டின் மத்தியஸ்தலத்தை அடுத்து முதலில் 4 நாள் போர் நிறுத்தம் பின்னர் கூடுதல் 2 நாள் நேற்று ஒருநாள் என மொத்தமாக 7 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது.
இந்த போர் நிறுத்தத்தின் முக்கிய நோக்கமே, இரு தரப்பில் இருந்தும் போர் பிணை கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது தான். அதன்படி நேற்றுவரை பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். நேற்று 8 இஸ்ரேல் பிணை கைதிகளும் , 19 பாலஸ்தீன பிணை கைதிகளும் இரு தரப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதுவரை 110 இஸ்ரேல் பிணை கைதிகளை ஹமாஸ் அமைப்பினரும், 240 பிணை கைதிகளை இஸ்ரேல் ராணுவமும் ரிலீஸ் செய்துள்ளது.
ஒரு நாளைக்கு 10 பிணை கைதிகளை விடுவிப்பதாக தான் ஒப்பந்தம் ஆனால் ஹமாஸ் தரப்பு அதனை மீறி 8 பேரை மட்டுமே விடுவித்ததக குற்றம் சாட்டி இருந்தது. இந்நிலையில் தான் இன்று காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது. பதிலுக்கு ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேல் ராணுவம் மீது தாக்குதல் நடத்தியது. வான்வெளி தாக்குதலை தொடர்ந்து தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் ராணுவம் தொடங்கியதாக தகவல்கள் வெளியுள்ளன.
பணயக்கைதிகள் பரிமாற்றத்த்திற்கான போர்நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க ஹமாஸ் அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.