5 ஆண்டுகள் நீண்ட போராட்டத்திற்கு பின் கருணை கொலைக்கான நீதிமன்ற அனுமதியை பெற்ற பெண்..!
5 ஆண்டுகள் நீண்ட போராட்டத்திற்கு பின் கருணை கொலைக்கான நீதிமன்ற அனுமதியை பெற்ற மனநல மருத்துவர்.
பெருநாட்டை சேர்ந்த எஸ்ட்ராடா என்ற மனநல மருத்துவர் கடந்த 30 ஆண்டுகளாக பாலிமையோசிடிஸ் என்ற தீராத நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார். செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட நிலையில்,சக்கர நாற்காலியில் அமர்ந்த வண்ணம் தான் வாழ்ந்து வந்துள்ளார்.
இவர் உச்சநீதிமன்றத்தில் தனது உயிரை மாய்த்துக் கொள்வதற்காக கருணை கொலைக்கு அனுமதி கோரி நாடி இருந்தார். 5 ஆண்டுகளாக அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடி வந்த நிலையில், தற்போது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில் தற்போது தான் அமைதியாகவும், நிம்மதியாகவும் உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் நீதிமன்றம் கருணை கொலை அனுமதி வழங்கியதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.