45 ஆண்டுகள் கழித்து உக்ரைனில் பிரதமர்.. மோடியை ஆரத்தழுவி வரவேற்ற செலன்ஸ்கி.!

PM Modi meets President of Ukraine

உக்ரைன் : அரசுமுறை பயணமாக “டிரைன் ஃபோர்ஸ் ஒன்” என்று அழைக்கப்படும் ரயில் மூலம் உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் போலந்து நாட்டு பயணத்தை முடித்து கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று, போலாந்தில் இருந்து ரயில் மூலம் உக்ரைனுக்கு பயணத்தை தொடங்கினார்.   அவர், “டிரைன் ஃபோர்ஸ் ஒன்” என்று அழைக்கப்படும் ரயில் மூலம் உக்ரைனுக்கு சென்றடைந்தார்.

ரஷ்யா- உக்ரைன் மோதல் காரணமாக உக்ரைனில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே பிரதமர் மோடி போலாந்து நாட்டில் இருந்து ரயில் மூலம் உக்ரைன் சென்றுள்ளார்.

இதன் மூலம் 45 ஆண்டுகளுக்குப் பிறகு, உக்ரைன் சென்றுள்ள இந்திய பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் மோடி. போலாந்தில் இருந்து ரயில் மூலமாக, சுமார் 10 மணி நேரம் பயணமாக கீவ் சென்றடைந்த அவருக்கு அந்நாட்டு அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.

அதன்பின், கீவ் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார். இதனை தொடர்ந்தது, அந்நாட்டு அதிபர் ஒலோடிமர் ஜெலன்ஸ்கியுடன் இருதரப்பு பேச்சு வார்த்தைகளை இன்று மேற்கொள்கிறார் பிரதமர் மோடி.

உக்ரைன் சென்றது பற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், ” கீவ் நகரில் உள்ள மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினேன். காந்தியின் இலட்சியங்கள் உலகளாவில் இருக்கும்  மில்லியன் கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றது. அவர் காட்டிய வழியை நாம் அனைவரும் பின்பற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், ” ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் கீவ் நகரில் உள்ள தியாகி கண்காட்சியில் நான் அஞ்சலி செலுத்தினேன். இந்த மோதல்கள் குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு பேரழிவை ஏற்படுத்துகின்றன. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு எனது அஞ்சலியை செலுத்தினேன், மேலும் அவர்களின் துயரத்தைத் தாங்கும் வலிமையைக் காண நான் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்