துருக்கியில் 12 மணி நேரத்திற்கு பின் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த ட்விட்டர்..!
துருக்கியில் 12 மணி நேரத்திற்கு பின் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த ட்விட்டர்.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்த நாட்டையே நிலை குலைய வைத்துள்ளது. பல அடுக்குமாடி கட்டங்கள் சீட்டு கட்டு போல விழுந்தது. துருக்கியில் மட்டும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துருக்கி அரசு அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளது.
ட்விட்டர்
இந்த நிலையில், துருக்கியில் அரசின் மீட்புப்பணிகள் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் ட்விட்டர் முடக்கப்பட்ட நிலையில், 12 மணி நேரத்திற்கு பின் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.