இந்தியாவிடம் உதவி கேட்டு உக்ரைன் அதிபர், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ரஷ்யா- உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் ஒரு வருடத்தைக் கடந்துள்ள நிலையில் இரு தரப்பிலும் பயங்கர பொருள் மற்றும் உயர் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போருக்கு நடுவில் கூடுதல் மனிதாபிமான உதவிகளைக் கோரி உக்ரைன் அதிபர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த கடிதத்தை உக்ரைன் துணை வெளியுறவு அமைச்சர் எமின் தபரோவா தனது நான்கு நாள் பயணத்தின் போது மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகியிடம் ஒப்படைத்தார். அந்த கடிதத்தில் மருந்துகள், மருத்துவ கருவிகள் உள்ளிட்ட பொருட்களை உக்ரைன் கேட்டுள்ளதாகவும், இந்தியா உதவுவதற்கு உறுதி அளித்ததாகவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இந்தியா வந்த முதல் உக்ரேனிய அதிகாரி எமின் தபரோவா ஆவார்.
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் தலைவர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பலமுறை பேசினார். மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, இராணுவத் தீர்வு எதுவும் இல்லை என்றும், எந்த அமைதி முயற்சிகளுக்கும் இந்தியா பங்களிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…