பிரிட்டன் தேர்தலில் வெற்றி வாகை சூடிய இந்திய வம்சாவளியினர்…

UK தேர்தல்: பிரிட்டன் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் படி 7 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
650 இடங்களை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல் நேற்று நிறைவடைந்து. இன்று முடிவுகள் வெளியாகி வருகிறது. இதில் தனி பெரும்பான்மையுடன் தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது. இதற்கு முழு பேறுபெற்றுள்ளார் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்.
14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள தொழிலாளர் கட்சிக்கும், விரைவில் பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள கீர் ஸ்டார்மருக்கும் பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2019 தேர்தலின் போது இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 பேர் எம்பிகளாக தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அதே போல இந்த முறையும் 107 இந்திய வம்சாவளியினர் பல்வேறு கட்சிகள் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு இருந்தனர். தற்போது அதன் முடிவுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள்இதோ…
ரிஷி சுனக் : ஆட்சியை இழந்தாலும் வடக்கு யார்க்ஷயர் தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக எம்பியாக வெற்றி பெற்றுள்ளார்.
ஷிவானி ராஜா : தொழிலாளர் கட்சி சார்பாக போட்டியிட்ட இவர், லீசெஸ்டர் ஈஸ்ட் தொகுதியில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளார்.
கனிஷ்கா நாராயண் : தொழிலாளர் கட்சி சார்பாக வேல்ஸ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள்ளார். அந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ள முதல் சிறுபான்மை பின்னனி கொண்ட வேட்பாளர் கனிஷ்கா நாராயண்.
சுயெல்லா : கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக பிரேவர்மேன் ஃபேர்ஹாம் மற்றும் வாட்டர்லூவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளர்.
ககன் மொகிந்திரா : கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக தென் மேற்கு ஹெர்ட்ஸ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
நவேந்து மிஸ்ரா : தொழிலாளர் கட்சி சார்பாக ஸ்டாக்போர்ட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர்தான் கடந்த 2019 தேர்தலிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்றார்.
சத்வீர் கவுர் : தொழிலாளர் கட்சி சார்பாக சவுத்தாம்ப்டன் டெஸ்ட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
உமா குமரன் : லண்டன் ஸ்டார்ட்ஃபோர்ட் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் ஆவார்.
இன்னும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் இந்திய வம்சாவளியினரின் வெற்றி எண்ணிக்கை கடந்த முறையை விட அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025