ஆப்பிள் நிறுவனத்திற்கு சுமார் 160 கோடி ரூபாய் அபராதம்.!

Default Image

ஐபோன் களில் சார்ஜர் இல்லாமல் விற்பனை செய்து வருவதாக கூறி ஆப்பிள் நிறுவனத்திற்கு சுமார் ரூ.160 கோடி அபராதம் விதித்த பிரேசில்.

ஆப்பிள் நிறுவனம் சார்ஜர் இல்லாமல் ஐபோன் களை விற்பனை செய்து வருவதாகக்கூறி $20 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.160 கோடி) அபராதம் விதிப்பதாக பிரேசிலியன் நீதிபதி அறிவித்தார். இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம், வாடிக்கையாளர்களை அந்நிறுவனத்தின் மேலும் ஒரு பொருளை வாங்க கட்டாயப்படுத்துகிறது என்று நீதிபதி மேலும் தெரிவித்தார்.

எலக்ட்ரானிக்ஸ் கழிவுகளைக் குறைப்பதற்கு உதவுவதாகக்கூறி, ஆப்பிள் நிறுவனம் கடந்த அக்-2020இலிருந்து சார்ஜர் வழங்குவதை நிறுத்தியது, மேலும் இது குறித்து பிரேசிலியன் நீதிபதி காரமுரு அபோன்சோ பிரான்சிஸ்கோ தனது தீர்ப்பில் கூறியதாவது, பிரேசிலில் கடந்த இரண்டு வருடங்களில் சார்ஜர் இல்லாமல் விற்கப்பட்ட ஐபோன் மாடல் 12 மற்றும் 13 வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சார்ஜரை வழங்குவதற்கு ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆணையிட்டார். மேலும் இனி தயாரிக்கும் ஐபோன் களுக்கு சார்ஜருடன் வழங்குமாறும் அவர் மேலும் தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

2024 ஆம் ஆண்டிற்கு பிறகு அனைத்து ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கேமராக்களுக்கு யூ.எஸ்.பி.-சி (USB-C) டைப்-சி போர்ட்களை, ஒற்றை சார்ஜர் தர நிலைகளாக(ஸ்டாண்டர்ட்) பயன்படுத்தவேண்டும் என்று, ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கடந்த வாரம் சட்டம் இயற்றப்பட்டது. இதனால் ஆப்பிள் நிறுவனம் தனது போன் மாடலை மாற்றி வடிவமைக்க இந்த சட்டம் வலியுறுத்தும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்