ரஷ்யாவில் சுமார் 48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸ், பனியால் உரைந்திருந்த ஏரியில் இருந்து புத்துயிர் பெற்றுள்ளது.
கொரோனா வைரஸால் உலகமே தத்தளித்தது நம் அனைவருக்குமே தெரியும். இந்த நிலையில், அவ்வப்போது புதிய வைரஸ் பெயர்களை சொல்லி பீதியாக்கி வருகின்றனர் விஞ்ஞானிகள்.
தற்போது, ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள பனிகளால் மூப்பட்டிருந்து ஏரியின் கீழ், சேகரிக்கப்பட்ட பழமையான மாதிரிகளை ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், “ஜாம்பி வைரஸ்கள்” என்று அழைக்கப்படும் 10க்கும் மேற்பட்ட புதிய வைரஸ்களை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அவை உறைந்த பனிகளில் ஐம்பதாயிரம் ஆண்டுகளாக சிக்கியிருந்தாலும் புத்துயிர் பெற்றிருப்பதால், இது மற்றொரு தொற்றுநோய் பற்றிய அச்சத்தைத் தூண்டியுள்ளது. ஆய்வு தகவலின்படி, வளிமண்டல வெப்பமயமாதல் காரணமாக பணிகள் உருகுவது, மீத்தேன் போன்ற பசுமை இல்ல வாயுக்களை விடுவிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தை மோசமாக்கும் என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர்.
அதன்படி, “ஜாம்பி வைரஸ்கள்” அனைத்தும் தொற்று நோய்க்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். ஆனால், ஒளி, வெப்பம், ஆக்ஸிஜன் மற்றும் பிற வெளிப்புற சுற்றுச்சூழல் மாறிகள் வெளிப்படும் போது இந்த அறியப்படாத வைரஸ்களின் தொற்று அளவை மதிப்பிடுவதற்கு கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூற்றின்படி, இந்த ஜாம்பி வைரஸ் அமீபா போன்ற நுண்ணுயிரிகளைப் பாதிக்கும் திறன் கொண்டவை என்றும், அவர்கள் ஆய்வு செய்த வைரஸ்கள் மனிதர்களுக்கு ஆபத்து குறைவு தான் என்றாலும் தாக்கும் அச்சம் கொண்டுள்ளது என தெளிப்படுத்தியுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…