ஹமாஸ் பிடியில் 21 வயது இளம்பெண்! கையில் பெரிய கட்டுடன் வெளியான வீடியோவால் பரபரப்பு…

woman held hostage

காசா குதியில் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய 21 வயது இளம்பெண் கையில் பெரிய கட்டுடன் மருத்துவ சிகிச்சை பெறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையான போர் தாக்குதல் 11வது நாளாக தொடர்ந்து வருகிறது.  இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் இதுவரை சுமார் 3000 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இஸ்ரேலை சேர்ந்த 199 பேரை பணயக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளனர் என்று நேற்று இஸ்ரேல் தெரிவித்தது.

மேலும், அந்த பணயக்கைதிகளில் வயதானவர்கள், குழந்தைகள், வெளிநாட்டினரும் உள்ளனர் என கூறப்பட்டுள்ளது. காசா பகுதியில் இஸ்ரேலிய பிணைக் கைதியின் முதல் வீடியோ ஒன்றை ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று வெளியிட்டதாக இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

டெலிகிராமில் வெளியிடப்பட்டதாக சொல்லப்படும் அந்த வீடியோவில், கை உடைந்த நிலையில் காயமடைந்த பிணைக் கைதியான அந்த இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதைக் காணலாம். மேலும் அந்த வீடியோவில் பேசிய பெண், தன்னை மியா ஷெம் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு நான் இஸ்ரேலின் ஷோஹமைச் சேர்ந்தவள் என்றும், கை உடைந்ததால் காசாவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், விரைவில் வீட்டிற்கு வர விரும்புவதாகவும் கூறினார்.

BREAKING: Hamas Releases Propaganda Video Of Israeli Woman Taken Hostage At Outdoor Concert For Peace, Who Is Now Being Held In Gaza As A Human Shield! pic.twitter.com/hByhnZ8L1b

— John Basham (@JohnBasham) October 17, 2023

அவர் தெற்கு இஸ்ரேலிய கிப்புட்ஸ் ரெய்மில் சூப்பர்நோவா டிரான்ஸ் இசை மற்றும் நடன விழாவில் இருந்து  ஹமாஸ் பிடியில் சிக்கியுள்ளார். அந்த விழா நடந்து கொண்டிருக்கும் பொழுது, ஹமாஸ் அமைப்பினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 260 பேர் கொல்லப்பட்டனர். அதில் காயமடைந்ததால் காசாவில் உள்ள மருத்துவமனையில் 3 மணி நேரம் தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

11ம் நாளாக தொடரும் போர் – ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி!

காசாவில் உள்ளவர்கள் என்னை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள், எனக்கு மருந்து கொடுக்கிறார்கள், எல்லாம் நன்றாக இருக்கிறது. ஒரே ஒரு கோரிக்கை தயவு செய்து, விரைவில்என்னை இங்கிருந்து விட்டு விடுங்கள், நான் எனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்.! ரஷ்யாவின் தீர்மானத்தை நிராகரித்தது ஐ.நா.!

ஹமாஸின் அரபு டெலிகிராம் சேனலில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு வசத்தில் முதல் நாளில் பிடிபட்ட பிணைக் கைதி தான் அந்த பெண் என்று கூறி இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது சந்தேத்தகத்தை எழுப்பியுள்ளது. இதன் மூலம் ஹமாஸ் தன்னை ஒரு மனிதாபிமான குழுவாக காட்டி கொள்கிறது என முயற்சிக்கிறது என குற்றம்சாட்டியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy