பாகிஸ்தான் அரசியலில் திருப்பம்; இம்ரான் கான் கைது வாரண்ட் ரத்து.!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட கைது வாரண்ட்டை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட கைது வாரண்ட்டை பாகிஸ்தான் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் வழக்கில், இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன்னதாக நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே பாதுகாப்புப் படையினருக்கும் இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
கானின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், போலீஸ் மறியல் போராட்டத்திற்கு தீ வைத்ததாகவும் இஸ்லாமாபாத் காவல்துறை தெரிவித்தது. இதனையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இம்ரான் கானின் கைது மீண்டும் தள்ளிப்போகிறது.