அமெரிக்காவில் நிலநடுக்கம்! மேற்கு கடற்கரை பகுதியில் சுனாமி எச்சரிக்கை?
கலிபோர்னியா மாகாணத்தில் மேற்கு கடற்கரையோர பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கலிபோர்னியா : அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்குஅந்நாட்டு வானிலை ஆய்வு மையத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் அது பின்வாங்கப்பட்டது.
கலிபோர்னியா மாகாணத்தில் மேற்கு கடற்கரையோர பகுதியில் ரிகான் எல்லைக்கு அருகிலுள்ள ஹம்போல்ட் கவுண்டியின் கடலோர நகரமான ஃபெர்ண்டேலுக்கு மேற்கே வியாழன் அன்று உள்ளூர் நேரடி காலை 10.44 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டு ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை (USGS) தெரிவித்துள்ளது.
கலிபோர்னியா மகானா மேற்கு கடற்கரையோர பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் தெற்கு சான் பிராசிஸ்கோ நகரம் வரையில் உணரப்பட்டபட்டதாக அந்நாட்டு நில அளவாய்வுத் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் எதுவோ ஏற்படவில்லை என்றாலும் கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது. பொருட்கள் உருளும் நிலை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனால், கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் சுற்றுலாவை முடித்து கொண்டு ஊர் திரும்புமாறும், உள்ளூர் மக்கள் நாட்டின் உள்பகுதிக்கும் செல்லும் மாறும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
கலிபோர்னியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையில் இருந்து வடக்கே கிட்டத்தட்ட 500 மைல்கள் (805 கிமீ) தொலைவில் இந்த நிலநடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பிறகு இந்த சுனாமி எச்சரிக்கை திரும்பபெறப்பட்டது.