வெள்ளை மாளிகையில் டிரக் மோதி விபத்து… அதிபருக்கு மிரட்டல் விடுத்த இந்திய வம்சாவளி இளைஞர் கைது.!
வெள்ளை மாளிகை அருகே டிரக்கை மோதி அமெரிக்க அதிபருக்கு மிரட்டல் விடுத்த இந்திய வம்சாவளி இளைஞர் கைது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகேயுள்ள, பூங்காவின் பாதுகாப்பு தடையின் மீது 19 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் டிரக்கில் வந்து சேதம் விளைவிக்கும் விதமாக வேண்டுமென்றே இருமுறை மோதியுள்ளார். இதையடுத்து அவர் நாஜி(Nazi, ஜெர்மனி) கொடியுடன் இறங்கியுள்ளார்.
பார்க் காவல்துறை மற்றும் இரகசிய சேவை அதிகாரிகள் அவரைக் கைது செய்து விசாரித்ததில், அவர் இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றும், செயின்ட் லூயிஸ் புறநகர் பகுதியான மிசோரியில் உள்ள செஸ்டர்ஃபீல்டில் வசித்து வரும் சாய் வர்ஷித் கந்துலா என அடையாளம் காணப்பட்டார்.
மேலும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொடர்ந்து அவரை விசாரித்ததில் கந்துலா ஜனாதிபதி ஜோ பிடனை கொல்ல விரும்புவதாகவும், அரசை கைப்பற்றுவதற்காகவும் வந்ததாக தெரிவித்தார். ரகசிய சேவை மற்றும் காவல் துறை அதிகாரிகள் அவரது டிரக்கை சோதனை செய்தனர்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், கந்துலா வேண்டுமென்றே பாதுகாப்பு தடைகளை தாக்கியதாக அதிகாரிகள் கூறினர். கொலை மிரட்டல், கடத்தல் அல்லது தீங்கு விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், கந்துலா கைது செய்யப்பட்டதாக பார்க் காவல்துறை கூறியது.<
The U.S. Secret Service said the incident involving a truck crash near the White House may have been “intentional,” and they have detained the 19-year-old driver, identified as Sai Varshith Kandula of Chesterfield, Missouri. https://t.co/Pd6BUFfgs9 pic.twitter.com/4Qnh4MtZgc
— Yahoo News (@YahooNews) May 23, 2023
/p>