நேருக்கு நேர் மோதிய ரயில் – 32பேர் உயிரிழப்பு..!
கிரீஸ் நாட்டில் டெம்பி நகர் அருகே ரயில் நேருக்கு நேர் மோதிய நிலையில், 26 பேர் உயிரிழப்பு
கிரீஸ் நாட்டில் டெம்பி நகர் அருகேயுள்ள எவங்கெலிஸ்மோஸ் பகுதியில், 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த விபத்தில், 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரயில் விபத்து
350 பயணிகளுடன் சென்ற ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிய 85 பேர் படுகாயம் அடைந்தனர். ரயில்கள் நேருக்கு நேர் மோதி 32 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, கவர்னர் கான்ஸ்டான்டினோஸ் அகோராஸ்டோஸ் கூறுகையில், மோதல் மிகவும் வலுவாக இருந்தது. பயணிகள் ரயிலின் முதல் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன.
மோதலுக்குப் பிறகு தீப்பிடித்த முதல் இரண்டு வண்டிகள், கிட்டத்தட்ட முற்றிலும் அழிந்துவிட்டன என தெரிவித்துள்ளார்.