ஹாலோவீன் கொண்டாட்டத்தில் அடுத்தடுத்த துப்பாக்கிச் சூடு! 11 பேர் பலி, 50க்கும் மேற்பட்டோர் காயம்!
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு வன்முறை கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. ஹாலோவீன் வார இறுதியில், அந்த நாட்டின் பல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதாகவும், 50க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் முக்கிய பகுதிகளான டெக்சாஸ், இண்டியானா, புளோரிடா, இல்லினாய்ஸ் மற்றும் ஜார்ஜியா, கன்சாஸ், மேரிலாந்து, நியூ மெக்சிகோ, லூசியானா மற்றும் ஓஹியோ ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, டெக்சாஸின் டெக்சர்கானாவில், சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஒரு பார்ட்டியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர்.
இண்டியானாபோலிஸில், சனிக்கிழமை நள்ளிரவில் ஒரு பெரிய விருந்து நடைபெற்று இருக்கும்பொழுது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.
கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விச்சிட்டாவில், துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் ஒருவர், இரவு விடுதிக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 2 பேர் காயமடைந்தனர்.
மேலும், புளோரிடாவின் தம்பாவில், சனிக்கிழமை ஹாலோவீன் பண்டிகையின் போது, துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில், இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்னர். இதனையடுத்து, லூசியானாவில் உள்ள சார்லஸ் ஏரியில், 3 இளைஞர்கள் ஒரு வீட்டில் விருந்து அருந்திக்கொண்டிருக்கும் பொழுது, சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகரமான சிகாகோ, வார இறுதியில் துப்பாக்கிச் சூட்டில், 25 பேர் காயமடைந்தனர் மற்றும் ஒருவர் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு வன்முறையால், இதுவரை 15,704 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கிட்டத்தட்ட 31,000 காயமடைந்துள்ளனர். இந்த சோகமான உயிரிழப்பு எண்ணிக்கையில் 1421 குழந்தைகள் அடுங்குவர்.