மக்களே உஷார்… இந்த மவுத்வாஷ் தினமும் பயன்படுத்தினால் புற்றுநோய் ஆபத்து.?

Mouth wash

பெல்ஜியம்: கூல் மின்ட் ரக மவுத் வாஷ் தினமும் பயன்படுத்தினால் அவர்களுக்கு புற்றுநோய் வரவழைக்கும் பாக்டீரியா அதிகம் பரவ வாய்ப்பு இருப்பதாக ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

பிரபல நிறுவனத்தின் மவுத் வாஷ்-ஐ தினமும் பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பெல்ஜியம் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெல்ஜியத்தை சேர்ந்த ஆண்ட்வெர்ப் வெப்பமண்டல மருத்துவ நிறுவனத்தை (Institute of Tropical Medicine in Antwerp, Belgium) சேர்ந்த ஆய்வாளர்கள் பிரபல கூல் மின்ட் நிறுவன மவுத் வாஷை சோதனைக்கு உட்படுத்தினர்.

அதில், கூல் மின்ட் ரக மவுத் வாஷை அதிகளவில் பயன்படுத்தினால் உணவு குழாய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது என்றும், அந்த குறிப்பிட்ட மவுத்வாஷை 3 மதத்திற்கு மேல் பயன்படுத்தினால் ஃபியூசோபாக்டீரியம் நியூக்ளியேட்டம் மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஆஞ்சினோசஸ் ஆகிய பாக்டீரியாக்கள் அதிகளவில் தோன்றும் என்றும், இந்த பாக்டீரியாக்கள் புற்றுநோயுடன் தொடர்புடையது என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த மவுத்வாஷில் உள்ள ஆல்கஹால் அளவு வாயில் உருவாகும் குறிப்பிட்ட ரக பாக்டீரியாவின் அளவை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பணியாற்றிய பல்கலைக்கழக விஞ்ஞானி பேராசிரியர் கிறிஸ் கென்யன், டெலிகிராப் செய்தி நிறுவனத்திற்கு இதுகுறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், மவுத்வாஷை தினமும் பயன்படுத்துவது புற்றுநோய் மற்றும் பல்வேறு நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கும் என்று கூறினார்.

மேலும், ‘ அனைத்து மக்களும் மவுத் வாஷை பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்த விரும்பினால், அவர்கள் ஆல்கஹால் அல்லாத மவுத் வாஷை பயன்படுத்த வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே, மவுத் வாஷ் பயன்படுத்த வேண்டும்.’ என்றும் கூறினார்.

ஓரினச்சேர்க்கையாளர்களர்கள் மத்தியில் மவுத்வாஷ் பயன்பாட்டின் தாக்கம் தினசரி உள்ளது என ​ஆய்வாளர்களின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது, 59 பங்கேற்பாளர்கள் கொண்டு மூன்று மாதங்களுக்கு தினமும் கூல் மின்ட்  ரக மவுத் வாஷ் பயன்படுத்த செய்து அவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட அறிக்கையாகும்.

சோதனையில் லிஸ்டெரின் கூல் மின்ட் ரக மவுத் வாஷ் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் உள்ளது போல   ஆல்கஹால் அடிப்படையிலான மவுத்வாஷ்களைப் பயன்படுத்தினாலும், இதே அளவு பாதிப்பு ஏற்படும் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது எனவும் பேராசிரியர் கிறிஸ் கென்யன் டெலிகிராப் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்