2021ல் ஐரோப்பாவில் 2,50,000 இறப்புகள்.. காரணம் என்ன? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!
ஐரோப்பிய சுற்றுச்சூழல் அமைப்பின் (EEA) அறிக்கையின்படி, கடந்த 2021இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் 2,50,000க்கும் மேற்பட்டவர்களின் மரணத்துக்கு நுண்ணிய துகள் மாசுபாடு தான் காரணம் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. நுண் துகள்கள் அல்லது PM2.5 என்பது கார் புகைகள் அல்லது நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்களின் உருவாகுவதாகும் என கூறப்படுகிறது.
நுண்ணிய துகள்கள் செறிவுகள் உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளை பூர்த்தி செய்திருந்தால், அந்த மரணங்களை தவிர்த்திருக்கலாம் என கூறபடுகிறது. அதாவது, ஐரோப்பிய சுற்றுச்சூழல் அமைப்பின் (EEA) அறிக்கையின்படி, நுண்ணிய துகள் மாசுபாடு (PM2.5) கடந்த 2021ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் 2,50,000க்கும் மேற்பட்ட மரணங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்து – 11 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!
நுண்ணிய துகள்கள் அல்லது PM2.5 மாசுபாடு, மனிதர்களின் சுவாசக் குழாயில் ரொம்ப ஆழமாக செல்ல கூடியது. இதனால், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய் அபாயத்தை மோசமாக்குகிறது. நுண்ணிய துகள்களின் செறிவுகள் தொடர்நத WHO பரிந்துரைகளை பின்பற்றி இருந்தால், இறப்புகளை தவிர்த்திருக்கலாம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் நுண்ணிய துகள் காற்று மாசுபாட்டின் காரணமாக இறந்தவர்களின் அதிகரித்துள்ளது. இதில், முக்கியமாக கொரோனா தொற்றுநோய் சமயத்தில் இந்த காற்று மாசுபாட்டின் அதிகரிப்பு காரணமாக இறப்புகளின் விகிதம் அதிகரித்துள்ளது என்றுள்ளனர். இருப்பினும், 2005 முதல் 2021 வரை, நுண்ணிய துகள் மாசுபாட்டினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை 41 புள்ளிகள் குறைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
நிறுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சத்தம்.. பிணை கைதிகளை விடுவித்த ஹமாஸ் – இஸ்ரேல்.!
ஐரோப்பிய ஒன்றியத்தில் கடந்த ஆண்டுகளில் நல்ல முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், நமது ஆரோக்கியத்தில் காற்று மாசுபாட்டின் தாக்கம் இன்னும் அதிகமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக இறப்புகள் மற்றும் நோய்கள் காற்று மாசுபாட்டால் ஏற்படக்கூடும் என்று EEA நிர்வாக இயக்குனர் லீனா யலாமோனோனென் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதே போல், நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) காற்றில் வெளிப்படுவதால் ஏற்படும் அகால மரணங்களும் 2020ல் இருந்து சிறிது அதிகரித்து, 2021ல் 52,000ஐ எட்டியுள்ளது என கூறப்பட்டுள்ளது. எனவே, காற்று மாசுபாடு ஐரோப்பியர்களின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக உள்ளது என ஐரோப்பிய சுற்றுச்சூழல் அமைப்பின் (EEA) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.