அடுத்தடுத்து அதிபயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!
பசிபிக் தேசமான வானாட்டு அருகே 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை.
ஆஸ்திரேலியாவிற்கு அருகே பிஜி, வானாட்டு தீவுகளுக்கு அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் 7.7 என்ற ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சற்று முன் 7.3 என்ற அளவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.
இந்த அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கத்தால் பிஜி, வானாட்டு தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூ கலிடோனியாவில் உள்ள லாயல்டி தீவுகளுக்கு தென்கிழக்கில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் வீடுகளை காலி செய்து. அப்பகுதியை விட்டு வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது.