அமெரிக்காவின் மிசிசிப்பியில், நடந்த தொடர் துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள டேட் கவுண்டியில், அர்கபுட்லா கம்யூனிட்டியில் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இதில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்கபுட்லா சாலையில் உள்ள கடைக்குள் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாகவும், அதில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கவுண்டி காவல் அதிகாரி ஷெரிப் பிராட் லான்ஸ் கூறினார். இதனையடுத்து அந்த சாலையில் உள்ள வீட்டிற்குள் ஒரு பெண் கொல்லப்பட்டிருந்தார், இந்த சம்பவத்தின் போது அவரது கணவர் காயமடைந்தார்.
அந்த சாலையில் சந்தேகப்படும் நபர் ஒருவர் வாகனத்தில் இருந்ததைக் கண்ட கவுண்டி காவல் அதிகாரிகள் அவரைக் கைது செய்து விசாரித்தனர். விசாரணைக்கு பின் மேலும் 4 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, வீட்டின் வெளியே 2 உடல்களும், அர்கபுட்லா அணை சாலையின் அருகே 2 உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
மிசிசிப்பியின் கவர்னர் டேட் ரீவ்ஸ் இது குறித்து கூறும்போது சந்தேகப்படும் நபர் கைது செய்யப்பட்டு காவலில் இருக்கிறார், அவரைத்தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் அவரின் நோக்கம் இன்னும் அறியப்படவில்லை என்று கூறினார். மேலும் இந்த துயரமான சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரார்த்தனை செய்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து விற்பனையான நிலையில், பொங்கல் பண்டிகையான…