காசா மீது தொடர் குண்டு மழை… இஸ்ரேலியன் நகரில் நுழைந்த ஹமாஸ் படையினர்!

HamasIsraelwar

இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் படையினருக்கும் கடும் மோதல் நிலவி வருகிறது. தென்மேற்கு பாலஸ்தீனம்  பகுதியான காசாவில் இருந்து 5,000 ராக்கெட்டுகள் மூலம், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பயங்கர தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது.

“ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்” என்ற பெயரில் ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுபோன்று, “operation iron sword” என்ற பெயரில் ஹமாஸ் குழுவினர் பதுங்கியிருக்கும் இடங்களில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசா மற்றும் பாலஸ்தீனம் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் மேற்குக்கரையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு நுழைய முயன்ற ஹமாஸ் குழுவினர் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தி வருவதால் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக ஹமாஸ் அமைப்பினர் போர் பிரகடனம் எடுத்துள்ளனர். கடந்த 2007 ஆம் ஆண்டு இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் காசா மீது இஸ்ரேல் முற்றுகையைத் தொடங்கியது.

காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையே இதுவரை நான்கு முறை போர் நடந்துள்ளது. இந்த நிலையில், காசா பகுதி வழியாக பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி, காசாவின் பல இடங்களில் இருந்து சுமார் 5,000 ராக்கெட்டுகள் சரமாரியாக ஏவியுள்ளனர்.

இந்த போரை தொடர்ந்து, இஸ்ரேல் போர் நிலையை அறிவித்து, மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேலை குறிவைத்து ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய ராணுவம் வெளியேற வேண்டும் என ஹமாஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அனைத்து அரசு நாடுகளும் இஸ்ரேலுடனான உறவை உடனடியாக துண்டிக்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும், ஹமாஸ் படையினர் தாக்குதலில் 22 பேர் பலி என்றும் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் பல்வேறு நகருக்குள் நுழைந்து ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஹமாஸ் படை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து காசாவில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். ஏவுகணை தாக்குதலுக்கு பயந்து காசா நகரில் பதுங்கு குழிகளில் மக்கள் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இஸ்ரேலியன் கடலோர நகரங்களான அஷ்கெலான், ஸ்டெராட்டில் ஹமாஸ் படையினர் நுழைந்த கட்சிகள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் எல்லையில் உள்ள தடுப்பு சுவரை ஹமாஸ் படையினர் தகர்த்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் குழு இடையே தாக்குதல் நடந்து வருவதால் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy