ஹைட்டியில் அதிகரித்து வரும் வன்முறை 5 நாட்களில் 234 பேர் கொலை
ஹைட்டியில் அதிகரித்து வரும் கும்பல் வன்முறை இறப்பு எண்ணிக்கை மற்றும் உரிமை மீறல்கள் -ஐநா மனித உரிமைகள் அலுவலகம் .
ஐக்கிய நாடுகள் சட்டசபை கூட்டத்தில்-ஹைட்டியின் தலைநகரைச் சுற்றி அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து ஐநா மனித உரிமைகள் அலுவலகம் சனிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
அப்போது, சிட் சோலைல் மாவட்டத்தில் மட்டும் இரு கும்பல்களுக்கு இடையே நடந்த சண்டையில் 99 பேர் கொல்லப்பட்டதற்காக கவலை தெரிவித்தது.
கும்பல் வன்முறை மற்றும் கிரிமினல்களை ஆதரிக்கும் எவருக்கும் சிறிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை அனுப்புவதை நிறுத்துமாறு அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
ஐ.நா.வின் உயர் ஆணையரின் செய்தித் தொடர்பாளர் ஜெரமி லாரன்ஸ் “நாங்கள் இதுவரை ஜனவரி முதல் ஜூன் இறுதி வரை, தலைநகர் முழுவதும் 934 கொலைகள், 684 காயங்கள் மற்றும் 680 கடத்தல்களை ஆவணப்படுத்தியுள்ளோம்,” என்று சனிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் கூறினார்.
மேலும், “ஜூலை 8-12 முதல் ஐந்து நாட்களாக, நகரின் சீட் சோலில் பகுதியில் இரு வேறு குழுக்குகள் வன்முறையில் குறைந்தது 234 பேர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்” என்று கூறினார்.