இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…சுனாமி எச்சரிக்கை இருக்கா?
நிலநடுக்கம் : இந்திய பெருங்கடலில் திடீரென தென்னாப்பிரிக்காவிற்கு அருகே 6.7 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து சுமார் 2,216 கி.மீட்டர் தூரத்தில் இந்திய பெருங்கடலில் 10 கி.மீட்டர் ஆழத்தில் இன்று காலை 10.25 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகி இருந்தது.
ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவலின் படி, அதிகாரிகளால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. புதன்கிழமை அதிகாலை 6.55 மணியளவில் உள்ளூர் நேரப்படி (GMT +2) தென்னாப்பிரிக்காவின் கடற்கரைக்கு அருகில் இந்தியப் பெருங்கடலுக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 10 கிமீ (6 மைல்) மிக ஆழமற்ற ஆழத்தில் இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, அதைப்போல வெளியே சாலைகள் மற்றும் கட்டிடங்கள் என எதற்கும் சேதம் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
No #tsunami threat to Australia from magnitude 6.5 #earthquake near South of Africa. Latest advice at https://t.co/Tynv3ZQpEq. pic.twitter.com/VVM4x3kfmj
— Bureau of Meteorology, Australia (@BOM_au) July 10, 2024