ஜப்பானில் பரபரப்பு.! பிரதமர் மீது ‘பைப்’ வெடிகுண்டு வீச்சு.!

Default Image

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மீது பைப் வெடிகுண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பித்தார். 

ஜப்பான் நாட்டில் வகாயாமா நகரில் அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) மக்கள் மத்தியில் தனது பேச்சை தொடங்குவதற்கு சற்று முன், பெரும் வெடி சத்தம் கேட்டது. இதனை அடுத்து, பிரதமர் ஃபுமியோ கிஷிடா அந்த இடத்தில் இருந்து பத்திரமாக பாதுகாவலர்கள் உதவியுடன் வெளியேற்றப்பட்டார்.

உயிர்தப்பிய பிரதமர் :

அந்நாட்டு பத்திரிகை தகவலின் படி, பைப் வெடிகுண்டு ஒன்று  பிரதமர்
ஃபுமியோ கிஷிடா மீது வீசப்பட்டது. ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளருடன் அக்கட்சி தலைவரும்ம், பிரதமருமான் ஃபுமியோ கிஷிடா பேசிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, 65 வயதான பிரதமர் ஃபுமியோ கிஷிடாபாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார், மேலும் அவர் காயமின்றி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குற்றவாளி கைது :

இதற்கிடையில், பைப் வெடிகுண்டை வீசிய குற்றவாளியை பிரதமரின் பாதுகாப்பு படை அதிகாரிகளால் உடனடியாக கைது செய்யப்பட்டார். பல சமூக ஊடக தளங்களில் இப்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்