பெண்களின் உள்ளாடைகளுடன் விளையாடும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள்.! அதிர்ச்சியூட்டும் புகைப்படம்…

Israel Hamas Gaza City

Israel : இஸ்ரேல் ராணுவத்தினர் 2 பேர் காசா நகரில் பெண்களின் உள்ளாடைகளுடன் விளையாடும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஹாமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது வரையில் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இரு தரப்பு தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1200 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், காசா நகரில் சுமார் 20 ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

காசா நகரில் ராணுவ தாக்குதலில் உயிரிழந்ததில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள், வயதானோர் ஆகும். இதனால், காசா நகரில் தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இருந்தும் ஹமாஸ் அமைப்பு முழுதாக அழியும் வரையில் தாங்கள் போரை நிறுத்த போவதில்லை என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்நிலையில், தற்போது இணையத்தில் ஓர் புகைப்படம் வெளியாகி மேலும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது . அதில், காசா நகரில் இருக்கும் ஒரு இஸ்ரேல் ராணுவ வீரர், பெண்ணின் உள்ளாடையை எடுத்து, அதனை அருகில் தூங்கி கொண்டு இருக்கும் இன்னொரு இஸ்ரேல் ராணுவ வீரர் முகத்திற்கு நேரே காண்பித்து விளையாடுகிறார்.

Israel Hamas War

ஏற்கனவே, இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் ஈடுபடும் போது பெண் கைதிகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்ந்ததாக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்து வரும் வேளையில் இரு ராணுவ வீரர்களின் இப்படியான செயல் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது இஸ்ரேல் ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் பாலஸ்தீனிய பெண்களின் நிலைமை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

இந்த புகைப்படங்களின் உறுதித்தன்மையை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து ஐநா மனித உரிமைகள் அலுவலக செய்தி தொடர்பாளர் ரவீனா ஷம்தாசனி கூறுகையில், இது போன்ற படங்களை வெளியிடுவது பாலஸ்தீன பெண்களையும், அனைத்து பெண்களையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. இதற்கு இஸ்ரேல் ராணுவம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த செய்தி குறித்து அறிந்த இஸ்ரேல் ராணுவம், சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் பற்றியும், வீரர்கள் பற்றியும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இது போன்ற செயல்கள் ஏற்க கூடியது அல்ல. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்