Categories: உலகம்

கடலுக்கு நடுவே ஸ்கூட்டரில் சென்ற நபர்..! சிரிப்பூட்டும் வைரல் வீடியோ ..!

Published by
பால முருகன்

வைரல் வீடியோ : சமூக வலைத்தளங்களில் அடிக்கடி எதாவது வீடியோக்கள் வைரலாவது என்பது வழக்கமான ஒன்று. அப்படி வைரலாகும் வீடியோக்களில் ஒரு சில வீடியோக்கள் நம்மளை சிரிக்க வைக்கும் வகையிலும், ஒரு சில வீடியோக்கள் அதிர்ச்சியடை வைக்கும் வகையில் இருக்கும். அப்படி தான் தற்போது கடலில் ஒருவர் ஸ்கூட்டரில் செல்லும்  வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

வைரலாகி வரும் இந்த வீடியோவில் அந்த நபர் ஸ்கூட்டருடன் கடற்கரைக்கு சென்றிருப்பதை காணலாம். அவரும் ஹெல்மெட் அணிந்துள்ளார். சிறிது நேரத்தில் கடலுக்குள் ஸ்கூட்டரை கொண்டு சென்ற நிலையில், அவர் பாதியில் திரும்புவார் என நினைக்கப்பட்ட நிலையில், வேகமாக ஆழத்திற்கு சென்றார். பிறகு அலைகள் தொடர்ச்சியாக வந்த காரணத்தால் சற்று அதிர்ந்துபோன அவர் திரும்பி வர முயற்சி செய்தார்.

திரும்ப முயன்றவுடன், ஸ்கூட்டர் மூழ்கத் தொடங்கியது. இருப்பினும், வண்டியை விடாமல் முயற்சி செய்து வெளிய வந்தார். வெளிய வந்தும் ஆபத்தை உணர்ந்து கொள்ளாமல் மீண்டும் ஸ்கூட்டரை எடுத்து ஓட்ட ஆரம்பித்தார். தண்ணீரில் மூழ்கியும் ஸ்கூட்டர் நிற்கவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். பலத்த முயற்சிக்கு பிறகு அந்த நபர் ஸ்கூட்டருடன் அலையில் இருந்து வெளியே வந்தார்.

வீடியோவை பார்க்கும்போது ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தாலும் மற்றோரு பக்கம் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த ஒரு சில நெட்டிசன்கள் கூகுல் மேப் பார்த்து போயிருப்பாரு எனவும், மேலும், சிலர் கடலுக்குள் சிக்கினால் என்ன ஆகும்? இதெல்லாம் யோசிக்க வேண்டாமா? என்பது போலவும் கூறிவருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

3 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

23 hours ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago

பணமோசடிக்கு செக் வைத்த பிஎஸ்என்எல்! ஏர்டெல், ஜியோவை ஓவர்டேக் செய்த புதிய அம்சம்!

சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…

1 day ago

தீவிரமடையும் சாம்சங் ஊழியர்கள் போராட்டம்., அமைச்சர்களுக்கு உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின்.!

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் இந்தியா எனும் தனியார் எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த…

1 day ago

ஹெஸ்பொல்லா தலைவர் நஸ்ரல்லாவின் ‘வாரிசு’ இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் பலி.?

இஸ்ரேல் : லெபனான் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட்…

1 day ago