கடலுக்கு நடுவே ஸ்கூட்டரில் சென்ற நபர்..! சிரிப்பூட்டும் வைரல் வீடியோ ..!
வைரல் வீடியோ : சமூக வலைத்தளங்களில் அடிக்கடி எதாவது வீடியோக்கள் வைரலாவது என்பது வழக்கமான ஒன்று. அப்படி வைரலாகும் வீடியோக்களில் ஒரு சில வீடியோக்கள் நம்மளை சிரிக்க வைக்கும் வகையிலும், ஒரு சில வீடியோக்கள் அதிர்ச்சியடை வைக்கும் வகையில் இருக்கும். அப்படி தான் தற்போது கடலில் ஒருவர் ஸ்கூட்டரில் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
வைரலாகி வரும் இந்த வீடியோவில் அந்த நபர் ஸ்கூட்டருடன் கடற்கரைக்கு சென்றிருப்பதை காணலாம். அவரும் ஹெல்மெட் அணிந்துள்ளார். சிறிது நேரத்தில் கடலுக்குள் ஸ்கூட்டரை கொண்டு சென்ற நிலையில், அவர் பாதியில் திரும்புவார் என நினைக்கப்பட்ட நிலையில், வேகமாக ஆழத்திற்கு சென்றார். பிறகு அலைகள் தொடர்ச்சியாக வந்த காரணத்தால் சற்று அதிர்ந்துபோன அவர் திரும்பி வர முயற்சி செய்தார்.
திரும்ப முயன்றவுடன், ஸ்கூட்டர் மூழ்கத் தொடங்கியது. இருப்பினும், வண்டியை விடாமல் முயற்சி செய்து வெளிய வந்தார். வெளிய வந்தும் ஆபத்தை உணர்ந்து கொள்ளாமல் மீண்டும் ஸ்கூட்டரை எடுத்து ஓட்ட ஆரம்பித்தார். தண்ணீரில் மூழ்கியும் ஸ்கூட்டர் நிற்கவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். பலத்த முயற்சிக்கு பிறகு அந்த நபர் ஸ்கூட்டருடன் அலையில் இருந்து வெளியே வந்தார்.
வீடியோவை பார்க்கும்போது ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தாலும் மற்றோரு பக்கம் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த ஒரு சில நெட்டிசன்கள் கூகுல் மேப் பார்த்து போயிருப்பாரு எனவும், மேலும், சிலர் கடலுக்குள் சிக்கினால் என்ன ஆகும்? இதெல்லாம் யோசிக்க வேண்டாமா? என்பது போலவும் கூறிவருகிறார்கள்.
When you pay attention to Google Maps.
— Figen (@TheFigen_) July 1, 2024