ஆணுறையால் சுற்றப்பட்ட வாழைப்பழத்தை விழுங்கிய நபர்..! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா..?
ஆணுறையில் சுற்றப்பட்ட வாழைப்பழத்தை சாப்பிட்ட நபருக்கு அறுவை சிகிச்சை செய்து அதை வெளியில் எடுத்த மருத்துவர்கள்.
அடையாளம் தெரியாத 34 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரால் எந்த உணவும் உட்கொள்ள முடியவில்லை மற்றும் எந்த பானமும் அருந்த முடியவில்லை என மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் 24 மணி நேரத்திற்கு மேலாக அவரது குடல் இயக்கம் இன்றி இருந்துள்ளது. இந்த நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிடி ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.அதில் அவரது வயிற்றில் ஆணுறையில் சுற்றப்பட்ட வாழைப்பழம் தடையாக இருந்தது தெரியவந்துள்ளது.
மன நோயாளியான இவர் கவனக்குறைவாக இதை உட்கொண்டுள்ளார். இதனை அடுத்து இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது வயிற்றில் இருந்த ஆணுறையில் சுற்றப்பட்ட வாழைப்பழத்தை வெளியே எடுத்துள்ளனர். மூன்று நாட்களுக்கு பின் அந்த நபர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து இந்த வார தொடக்கத்தில் “கியூரியஸ்” இதழில் வெளியிடப்பட்டது. அந்த இதழில், இதுபோன்ற வழக்கு உலகிலேயே முதல்முறையாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.