ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட்.. தொண்டையில் வளர்ந்த அரிதான முடி!

Heavy Smoking

ஆஸ்திரேலியா : 30 ஆண்டுகளாக தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் புகைத்த ஒரு மனிதனுக்கு ஒரு அரிதான சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, அதிகப்படியான புகை பழக்கத்தால் அந்த மனிதனின் தொண்டைக்குள் அரிதான முடி வளர்ந்துள்ளது.

இதன் காரணமாக பெயர் குறிப்பிடத்தப்படாத ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 2007 ஆம் ஆண்டில் கரடுமுரடான குரல், மூச்சுத் திணறல் மற்றும் நாள்பட்ட இருமல் போன்ற புகார்களை சந்தித்ததால், இது தொடர்பாக மருத்துவரை அணுகியுள்ளார்.

மருத்துவரிடம் அவர் 1990-ஆம் ஆண்டு 20 வயதில் புகைபிடிக்கத் தொடங்கியதாக கூறியுள்ளார். இதனையடுத்து, அவருக்கு இருந்த அறிகுறிகளின் அடிப்படையில், மருத்துவர்கள் நோயாளியின் சுவாசப்பாதையில் ஒரு சிறிய கேமராவை விட்டு பார்த்தனர்.

அப்பொழுது, இதற்கு முன்னதாக அறுவை சிகிச்சை செய்த அவரது தொண்டையில் ஒரு பகுதியிலிருந்து பல முடிகள் வளர்ந்து இருப்பதை கண்டறிந்தனர். இந்த முடிகள், வழக்கமாக ஆறு முதல் ஒன்பது வரை வளருமாம், அது சுமார் 2 அங்குல நீளத்தை எட்டும் என சொல்லப்படுகிறது.

இதனால், அவற்றை அகற்றுவதற்காக அவர் ஒவ்வொரு ஆண்டு என மொத்தம் 14 ஆண்டுகளுக்கு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஏனென்றால், முடிகளை வெளியே இழுப்பதன் மூலமும், நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்துவதன் மூலமும் தற்காலிகமாக நிவாரணம் பெற்றாலும், முடி மீண்டும் வந்து கொண்டே இருந்தது.

இறுதியாக, 2022 இல் என்னசெய்வதென்று யோசித்து ஒரு முக்கிய முடிவை எடுத்தார். அதாவது, புகைபிடிப்பதை ஒரே அடியாக விட்டுவிட்டார, பின்னர் மருத்துவர்களை ஒரு முக்கிய சிகிச்சை அளித்தனர். அதன் மூலம் முடி வளர்ச்சியின் வேருடன் நீக்கியதும், அது மீண்டும் வளருவதைத் தடுக்க உதவியது. இதன் பிறகு அவர் புராணம் குணமடைந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live - 18042025
sivakumar about Suriya
TVK Leader Vijay Speech
virender sehwag virat kohli Rajat Patidar
TVK Meeting
upi gst over 2000
Actor Bobby Simha car accident