“ஏவுகணை வந்தா அணு ஆயுதம் வரும்”…உக்ரைன் அமெரிக்காவுக்கு ஒரே கையெழுத்தில் புடின் எச்சரிக்கை!
ரஷ்யாவிற்குள் உள்ள ராணுவ இலக்குகளை தாக்க நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க அனுமதித்துள்ளது.
அமெரிக்கா: 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இந்த போருக்கான முக்கிய காரணமே, நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்த்துக்கொள்ள கூடாது, அதனை தடுப்பதற்காக தான் ரஷ்யா இந்த போரை நடத்தி வருகிறது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
அதைப்போல, ரஷ்யாவின் நட்பு நாடான வடகொரியா, ரஷ்யாவுக்கு ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத உதவிகளை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இரு நாடுகளுக்குமான மோதல் மேலும் தீவிரமடைந்து, இரண்டாண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
இந்த சுழலில், ஏற்கனவே, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி, ரஷ்யாவின் உள்ளக பகுதிகளில் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால், ரஷ்யா-உக்ரைன் மோதல் புதிய முறைகளில் மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியிருக்கிறது.
இதனையடுத்து, உக்ரைன் -ரஷ்யா போரின் மத்தியில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் புதிய ஆணையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டுள்ளார். இது, அமெரிக்கா உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதி அளித்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, ரஷ்ய அதிபர் புதின் ஏற்கனவே அமெரிக்காவுக்கும் அதன் மேற்கு கூட்டாளிகளுக்கும் உக்ரைன் போரின் தாக்கம் உலகப் போருக்கு வழிவகுக்கும் அபாயமாக உள்ளது என ஏற்கனவே எச்சரிக்கை வெளியீட்டு இருந்தார். அமெரிக்காவின் ஏவுகணை அனுமதி ஒரு “ஆபத்தான முடிவு” எனவும் புதின் வெளிப்படையாக கூறியிருந்தார்.
உக்ரைனின் மீது ஏற்கனவே ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியிருந்ததின் காரணமாக, அமெரிக்கா தன் தயாரிப்பான தொலைநோக்கி ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க முடிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . நேட்டோ கூட்டமைப்பின் ஒரு முக்கிய உறுப்பாக உள்ள அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனின் நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், மோதல் மேலும் தீவிரமாகவும் காரணமாக அமைந்துள்ளது.