அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!

new corona variant

அமெரிக்கா, டென்மார்க் மற்றும் இஸ்ரேலில் புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்படுள்ளது. இந்நிலையில், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி.) இந்த வைரசின் வீரியம் மற்றும் பரவலை கண்காணித்து வருவதாக தெரிவித்து உள்ளது.

மேலும், இந்த புதிய வைரஸுக்கு BA.2.86 என்று பெயரிடப்பட்டுள்ளது. WHO-இன் தகவலின்படி, இதுவரை ஒரு சில நாடுகளில் மட்டுமே இந்த புதிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவானது தற்போது பரவி வரும் XBB.1.5 கொரோனா மாறுபாட்டிலிருந்து 36 மாதிரிகளை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, உலக நாடுகளை ஆட்டிப்படைத்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4,49,96,426 ஆக உள்ளது. இதுவரை மொத்தம் 4,44,63,66 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 924 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்