சுவிட்சர்லாந்த்தில் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தம் ! புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக அடுத்த நடவடிக்கை!

Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதே போல இதற்கு முன்னரும், சுவிட்சர்லாந்தில் தர்காலிகமாக வாழ்ந்து வருபவர்கள் (provisionally admitted foreigners) தங்களுடைய குடும்பங்களுடன் சேர்ந்து சுவிற்சர்லாந்தில் வாழ வேண்டும் என்றால் மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்று முதலில் அரசு நிறைவேற்றிய சட்டம் கூறியது. அதன் பிறகு ஐரோப்பாவின் மனித உரிமை நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பை அடிப்படையாய் கொண்டு இந்த நிலையை மாற்றி இனி அவர்கள் 2 ஆண்டுகள் மட்டுமே காத்திருந்தால் போதுமானது என சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டு வர போகிறோம் என சுவிட்சர்லாந்து அரசு ஒரு செய்தியை வெளியிட்டது.
தற்போது, அதே போல புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக ஒரு சட்ட திருத்தத்தை சுவிட்சர்லாந்து அரசு கொண்டு வர உள்ளதாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் வரவிருக்கும் ஜூன் 1ஆம் தேதி முதல், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மக்களும், ஆவணங்கள் இல்லாமல் அங்கு புலம்பெயர்ந்தோரும் தொழிற்பயிற்சி பெறுவதற்கான நடைமுறை எளிதாக்கப்பட உள்ளது என்பது தான்.
இதை பற்றி தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மக்களும், ஆவணங்கள் இல்லாமல் அங்கு புலம்பெயர்ந்தோரும் சுவிட்சர்லாந்தில் அடிப்படை தொழிற்பயிற்சி வேண்டும் என்றால், அவர்கள் கட்டாயம் ஸ்விட்ஸ்ர்லாந்தில் 5 ஆண்டுகள் கட்டாய கல்வி பெற்றிருக்க வேண்டும் என்று ஒரு சட்டம் இருந்தது. அதன் பிறகு கடந்த 2022-ம் ஆண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெருபான்மையனோர், இந்த சட்டம் மிக கடுமையானது என்று அதற்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்தனர்.
தற்போது, இந்த சட்டத்தில் சுவிட்சர்லாந்து அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதாவது, வருகிற ஜூன்- 1 ம் தேதி முதல் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மக்களும் ஆவணங்கள் இல்லாமல் அங்கு புலம்பெயர்ந்த மக்களும் சுவிட்சர்லாந்து நாட்டில் அடிப்படை தொழிற்பயிற்சி வேண்டுமென்றால் அவர்கள் 2 ஆண்டுகள் கட்டாய கல்வி பெற்றாலே போதுமானது என சட்டத்திருத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் அங்கு புலம்பெயர்ந்த மக்கழும், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டோரும் சற்று மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.