நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.! சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்.!  

Default Image

நியூசிலாந்தில் இன்று காலை இந்திய நேரப்படி 6.10 மணியளவில், சகதிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

நியூசிலாந்தில் உள்ள, கெர்மடெக் தீவுகள் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) இந்திய நேரப்படி காலை 6.10 மணியளவில், 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது, கடல் மட்டத்தில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . இந்த நிலநடுக்கத்தால், அமெரிக்கவில் சுனாமி எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதே போல, கடந்த மாதம், நியூசிலாந்து கெர்மடெக் தீவுகளில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்