Categories: உலகம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! அதிர்ச்சியில் ஆழ்ந்த மக்கள்!

Published by
பால முருகன்

Earthquake : இந்தோனேசியாவில் இருக்கும் தீவான ஜாவாவின் தெற்குப் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் இருக்கும் தீவான ஜாவாவின் தெற்குப் பகுதியில் இன்று காலை 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்தனர். திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் எவ்வளவு பேருக்கு காயம் ஏற்பட்டது எவ்வளவு பொருள் சேதம் என்பதற்கான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கம் பஞ்சார் நகருக்கு தெற்கே 102 கிலோமீட்டர் (63 மைல்) தொலைவில் 68.3 கிலோமீட்டர் (42.4 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும், இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை. எனவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் ஜகார்த்தாவில் இருக்கும் உயரமான அடுக்குகள் சுமார் ஒரு நிமிடம் கிடுகிடுத்ததாம். மேற்கு ஜாவா மாகாண தலைநகரான பாண்டுங் மற்றும் ஜகார்த்தாவின் துணைக்கோள் நகரங்களான டெபோக், டாங்கெராங், போகோர் மற்றும் பெகாசி ஆகியவற்றில் இரண்டு மாடி வீடுகள் பலமாக குலுங்கியது.

இதனால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். மேலும், இந்த நிலநடுக்கம் மேற்கு ஜாவா, யோககர்த்தா மற்றும் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மற்ற நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது எனவும் இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் தகவலை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக கடத்த 2022-ஆம் ஆண்டு மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் நகரில் ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 602 பேர் உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

27 minutes ago
புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

2 hours ago
MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

3 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

3 hours ago

அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி துரோகிதான்…அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…

4 hours ago

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…

4 hours ago