இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! அதிர்ச்சியில் ஆழ்ந்த மக்கள்!

Indonesia earthquake

Earthquake : இந்தோனேசியாவில் இருக்கும் தீவான ஜாவாவின் தெற்குப் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் இருக்கும் தீவான ஜாவாவின் தெற்குப் பகுதியில் இன்று காலை 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்தனர். திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் எவ்வளவு பேருக்கு காயம் ஏற்பட்டது எவ்வளவு பொருள் சேதம் என்பதற்கான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கம் பஞ்சார் நகருக்கு தெற்கே 102 கிலோமீட்டர் (63 மைல்) தொலைவில் 68.3 கிலோமீட்டர் (42.4 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும், இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை. எனவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் ஜகார்த்தாவில் இருக்கும் உயரமான அடுக்குகள் சுமார் ஒரு நிமிடம் கிடுகிடுத்ததாம். மேற்கு ஜாவா மாகாண தலைநகரான பாண்டுங் மற்றும் ஜகார்த்தாவின் துணைக்கோள் நகரங்களான டெபோக், டாங்கெராங், போகோர் மற்றும் பெகாசி ஆகியவற்றில் இரண்டு மாடி வீடுகள் பலமாக குலுங்கியது.

இதனால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். மேலும், இந்த நிலநடுக்கம் மேற்கு ஜாவா, யோககர்த்தா மற்றும் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மற்ற நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது எனவும் இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் தகவலை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக கடத்த 2022-ஆம் ஆண்டு மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் நகரில் ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 602 பேர் உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்