1982 அடி உயர மலை உச்சியில் அமைய உள்ள பிரம்மாண்டமான உணவகம்!
ஐரோப்பாவில் உள்ள ஸ்கன்டிநேவிய தீபகற்பத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள நாடே நார்வே எனப்படுகிறது.இது அதிகாரபூர்வமாக நோர்வே இராச்சியம் என அழைக்கப்படுகிறது.இந்த நாடு மூன்று கடல்களை மையமாக கொண்டுள்ளது.
மேலும் நார்வேயில் உள்ள ப்ரெய்கெஸ்டோலன் பகுதியில் 1982 அடி உயர மலை உச்சி பிரபலமான சுற்றுலா தளமாக அமைந்துள்ளது.இந்நிலையில் இந்த மலை உச்சியில் சொகுசு உணவகம் ஒன்று கட்டப்பட உள்ளது.
இந்நிலையில் ஐரோப்பா ,ஆசியா ஆகிய இரண்டு கண்டங்களுக்கு இடையே உள்ள துருக்கி நாட்டை சேர்ந்த கட்டுமான நிறுவனம் இதற்கான வடிவமைப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் பல்வேறு அடுக்குகளாக கட்டப்பட உள்ள இந்த உணவகத்தில் தாங்குபவர்கள் மிகவும் திரில்லிங்கான அனுபவத்தை பெறலாம் என்று கூறப்படுகிறது.மேலும் நீச்சல் குளத்தின் வடிமைப்பிலும் இந்த உணவகம் கட்டப்பட உள்ளது.
அந்த நீச்சல் குளம் பலமான கண்ணாடிகளை கொண்டு வடிவமைக்கப்பட உள்ளது.மேலும் அதில் குளிப்பவர்களுக்கு அந்தரத்தில் குளிப்பது போன்ற உணர்வை கொடுக்கும் என்று கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த உணவகம் எவ்வாறு வடிவமைக்கப்பட உள்ளது என்ற வடிவமைப்பு மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.இதன் கட்டுமான பணிகள் எப்போது நடைபெற உள்ளது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.