யானையுடன் மல்லுக்கட்டும் சிங்கம்…கடைசியில் நடந்த சம்பவம்?வைரலாகும் வீடியோ!

elephant lion

அனிமல் வீடியோ : சமூக வலைத்தளங்களில் அடிக்கடி விலங்குகள் தொடர்பாக நாம் வேடிக்கையாக பார்க்க கூடிய வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கமானது. ஒரு சில வீடியோக்கள் வேடிக்கையாக இருந்தாலும், பரிதாபமாகவும் இருக்கும். அப்படி தான் தற்போது அடர்ந்த காட்டிற்குள் சிங்கம் ஒன்றும் யானை ஒன்றும் சண்டைபோட்டுக்கொள்ளும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

வீடியோவில் ” ஒரு யானையை சிங்கம் ஒன்று தும்பிக்கையை பிடித்துக்கொண்டு தாக்க முயற்சி செய்கிறது. ஆனால், யானையின் தோல் மிகவும் கடினமாக இருப்பதால் சிங்கத்தால் அதனை தாக்க முடியவில்லை. இருப்பினும், விடாமல் கடுமையாக தனது கூர்மையான பற்களை வைத்து கீழே விழாமல் யானையை சிங்கம் தாக்க முயற்சி செய்து கொண்டே இருந்தது.

யானையும் போராடி சிங்கத்தை தக்க முயற்சி செய்தது ஆனால், சிறுது நேரம் முடியவில்லை. பிறகு தனது முழு பலத்தை காட்டிய யானை தந்ததில் தொங்கி கொண்டு இருந்த சிங்கத்தை தூக்கி வீசியது. கீழே விழுந்த பெண் சிங்கம் யானை மீது இருக்கும் பயத்தில் தெறித்து ஓடியது. இந்த சண்டையில் யானைக்கு சிறிய காயம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் யானை பலம் என்றால் சும்மாவா? எனவும், மேலும் சிலர் யானையுடன் போராடிய சிங்கத்தின் தைரியத்துக்கு பாராட்டுக்கள் எனவும் தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Animal_Planet.BR (@animal_planet.br)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்