பாரிஸ் ரயில்நிலையத்தில் ஒரு நபர் கத்தியால் பயணிகளை தாக்கியதில் பலர் காயமடைந்தனர்.
பிரான்ஸ் நாட்டில் பாரிஸில் உள்ள கார் டு நார்ட் (Gare du Nord) எனும் ரயில் நிலையத்தில் இன்று ஒரு மர்ம நபர் உட்புகுந்து தான் வைத்திருந்த கூறிய ஆயுதத்தால் (கத்தி) அங்குள்ள பயணிகளை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் பல பயணிகள் காயமடைந்துள்ளனர். விஷயம் அறிந்து விரைந்த போலீசார், அந்த நபரின் தாக்குதலை கட்டுப்படுத்த துப்பாக்கியால் அந்த நபரை சுட்டு பிடித்துள்ளனர்.
அந்த நபர் பற்றிய விவரம், அவர் எதற்காக தாக்கினார் என விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால், அவர் மீது எந்தவித தீவிரவாத தொடர்பும் இல்லை என்பது மட்டும் தற்போது போலீசார் தரப்பில் தெளிவாகியுள்ளது.
லண்டன் மற்றும் வடக்கு ஐரோப்பாவிற்கான ரயில்களுக்கான மையமாக செயல்படும் பிரதான ரயில்நிலையத்தில் நடந்த தாக்குதல் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…