யாஹ்யா சின்வாரின் மனைவி வைத்திருந்த ரூ.27 லட்சம் மதிப்புள்ள கைப்பை.! பதுங்கு குழிக்குள் ஆடம்பரம்.!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் மனைவி, பதுங்கு குழிக்குள் தலைமறைவாக இருந்தபோது, $32,000 டாலர் மதிப்புடைய கைப்பையுடன் காணப்பட்டார்.

Sinwar FOOTAGE

இஸ்ரேல் : காசா பகுதிகளில் வான்வழி தாக்குதலை தொடர்ந்து தரை வழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள இஸ்ரேல் ராணுவம், கடந்த சில தினங்களுக்கு முன் வடக்கு காசாவில் இருந்து பாலஸ்தீனர்களை வெளியேறும்படி உத்தரவிட்டிருந்தது.

இந்த போரின் தொடர்ச்சியாக ஹமாஸ் படையினரின் முக்கிய தலைவரான யாஹ்யா சின்வார் கடந்த வியாழக்கிழமை (17-ம் தேதி) இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டார். இதற்கு பழி வாங்கும் வித மாக கடந்த வெள்ளிக்கிழமை (18-ம் தேதி) இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வீடு மீது, ஹமாஸ் படையினர் பயங்கர தாக்குதலை நடத்தினர்.

கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரின் ஆடம்பரமான பதுங்கு குழியின் காட்சிகளைக் காட்டும் புதிய வீடியோவை இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ளது. தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாக, அக்டோபர் 7 அன்று யாஹ்யா சின்வார் மற்றும் அவரது குடும்பத்தினர் காசா சுரங்கப்பாதைக்குள் நடமாடும் காட்சிகளை IDF செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி வெளியிட்டார்.

அந்த வீடியோவில், முதலில் அவரது இரண்டு குழந்தைகள் மெத்தையை தூக்கி செல்வதையும், பின்னாடியே யாஹ்யா சின்வார் செல்கிறார். இறுதியாக அவரது மனைவி அபு ஜமர் ரூ.28 லட்சம் ($32,000) மதிப்புள்ள ஹெர்ம்ஸ் பிர்கின் என்கிற கைபையை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஹெர்ம்ஸ் பிர்கின் சிறப்பு

அப்படி என்ன அந்த பையில் சிறப்பு என்று பார்த்தால், ஹெர்ம்ஸ் பிர்கின் பையானது பிரபலங்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் பயன்படுத்துவது வழக்கம். அதன்படி, கர்தாஷியன்கள் முதல் மெலானியா டிரம்ப் வரை இதேபோன்ற கருப்பு தோல் கைப்பைகளை பயன்படுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்