பிப்ரவரி 1-ஆம் தேதி பச்சை நிற வால் நட்சத்திரம் பூமிக்கு அருகில் வரும் என விஞ்ஞானிகள் கணிப்பு.
விண்ணில் உள்ள பாறைகள் மற்றும் ஐஸ் கட்டிகளால் ஆன கோள வடிவிலானதுதான், வால் நட்சத்திரம். அந்த வகையில் 50,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமிக்கு அருகில் வரும் பச்சை நிற வால் நட்சத்திரம் இந்த வாரம் பூமிக்கு அருகில் வர இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 1-ஆம் தேதி இந்த வால் நட்சத்திரம் பூமிக்கு அருகில் வரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த வால் நட்சத்திரத்தை கடந்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இது முதலில் சிறு கோள் என்றுதான் கணிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது வால் நட்சத்திரங்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நட்சத்திரமானது 4.2 கோடி கிலோமீட்டர் தூரத்தில் பூமியை கடந்து செல்ல உள்ளது. இதை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும், இரவு நேரத்தில் இந்த வால் நட்சத்திரம் மிகவும் தெளிவாக பார்க்க முடியும் என்றும், இந்த வால் நட்சத்திரத்தால் பூமிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.
மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார்.…
டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…