இங்கிலாந்தில் பிரபல ஹோட்டலில் தீ விபத்து..! 3 பேர் உயிரிழப்பு..!
பெர்த்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அதிகாலை காலை 5.10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழப்பு
இங்கிலாந்தில், பெர்த்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அதிகாலை காலை 5.10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவசர சேவைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு நாயும் உடல் கருகி உயிரிழந்துள்ளது. ஹோட்டலில் இருந்து விருந்தினர்கள் வெளியேற்றப்பட்டனர் மற்றும் பொதுமக்கள் அந்த பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் ஸ்காட்லாந்து செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஜனவரி 2 திங்கட்கிழமை அதிகாலை 5.10 மணிக்கு முன்னதாக, பெர்த்தில் உள்ள கவுண்டி பிளேஸில் உள்ள நியூ கவுண்டி ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஹோட்டலில் இருந்து பல விருந்தினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.