பார்வையற்றோர் பள்ளியில் இரவில் ஏற்பட்ட தீவிபத்து, உகாண்டாவில் பரிதாபம்.!
உகாண்டாவில் பார்வையற்றோருக்கான பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய உகாண்டாவில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து நள்ளிரவு 1 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் விபத்தில் குழந்தைகள் உட்பட பதினொரு பேர் இறந்துள்ளனர் மற்றும் ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். நள்ளிரவு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது இதனால் விபத்துக்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை என்று போலிசார் தெரிவித்தனர்.